சிறு வயதில் எனக்கு பிடித்தவை கதை சொல்ல பிடிக்கும் ! கதை புத்தகங்கள் படிக்க பிடிக்கும் !! ஆத்தூர் ஸ்கூலில் படிக்கும் போது நல்ல ரேங்க் வாங்கி கொடி கம்பத்தை சுற்றி வர பிடிக்கும் !!!
Wednesday, 25 December 2013
Sunday, 7 April 2013
பருப்பு கார அடை
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி: 100 gm
துவரம் பருப்பு: 100 gm
கடலை பருப்பு : 100gm
பாசிப் பருப்பு: 100 gm
உளுந்து : 75 gm
வர மிளகாய்: 6
உப்பு தேவைக்கேற்ப
தாளிக்க
கடுகு: 1/2 ஸ்பூன்
வெள்ளை உளுத்தம் பருப்பு: 1/2 ஸ்பூன்
சீரகம்: 1 ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம்: 1 கப்
கறிவேப்பிலை
கொத்தமல்லி
செய்முறை:
அரிசி, பருப்பு வகைகளை 2 மணி நேரம் ஊற வைத்து அதில் மிளகாய், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து காய்ந்ததும் எண்ணை விட்டு ஒவ்வொன்றாக மேற்கூறிய பொருட்கள் போட்டு தாளிக்கவும். அடுத்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி மாவில் போட்டு கலக்கவும். பின்பு சிறிது கெட்டியாக தோசை கல்லில் அடையாக ஊற்றி இரு புறமும் சிவக்க விட்டு எடுக்கவும்.
தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்.
அப்படியேவும் சாப்பிடலாம் !!!
Subscribe to:
Posts (Atom)