Friday, 16 January 2015

Nesavallis Sambar Milagai Podi

நேசவல்லிஸ் சாம்பார் மிளகாய் பொடி

தேவையான பொருட்கள்
சிவப்பு மிளகாய் - 1 k
கொத்த மல்லி - 1/2 k
துவரம் பருப்பு - 100g
உளுத்தம் பருப்பு - 100 g
கடலை பருப்பு - 100g
மிளகு - 50g
சீரகம் - 50g
வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - 1 சின்ன கட்டி
உப்பு - 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் காம்பு நீக்கி சுத்தம் செய்து 2 நாட்கள் வெயிலில் காய வைக்கவும். மற்ற பொருட்கள் எல்லாம் தனி தனியாக பொன்னிறமாக வறுத்து  கொள்ளவும். மிளகாயோடு சேர்த்து மெஷினில் கொடுத்து நைசாக அரைத்து பேப்பரில் கொட்டி ஆற வைத்து டப்பாவில் எடுத்து வைக்கவும்

Wednesday, 25 December 2013

Kolams - Manavarai Kolam and Veedu Thadukum Kolam

Manavarai Kolam


Popularly called as Veedu Thadukum Kolam (Attur )

Dear Reader - Did you like it...Share your feedback below....

Sunday, 7 April 2013

பருப்பு கார அடை


தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி: 100 gm
துவரம் பருப்பு: 100 gm
கடலை பருப்பு : 100gm
பாசிப் பருப்பு: 100 gm
உளுந்து : 75 gm
வர மிளகாய்: 6
உப்பு தேவைக்கேற்ப

தாளிக்க
கடுகு: 1/2 ஸ்பூன்
வெள்ளை உளுத்தம் பருப்பு: 1/2 ஸ்பூன்
சீரகம்: 1 ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம்: 1 கப்
கறிவேப்பிலை
கொத்தமல்லி

செய்முறை:
அரிசி, பருப்பு வகைகளை 2 மணி நேரம் ஊற வைத்து அதில் மிளகாய், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து காய்ந்ததும் எண்ணை விட்டு ஒவ்வொன்றாக மேற்கூறிய பொருட்கள் போட்டு தாளிக்கவும். அடுத்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி மாவில் போட்டு கலக்கவும். பின்பு சிறிது கெட்டியாக தோசை கல்லில் அடையாக ஊற்றி இரு புறமும் சிவக்க விட்டு எடுக்கவும்.

தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்.
அப்படியேவும் சாப்பிடலாம்  !!!


Wednesday, 5 October 2011

தக்காளி குருமா

தேவையான பொருட்கள்

அரைக்க
சின்ன வெங்காயம் - 10 
தேங்காய் 1  மூடி  
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
(மேலும சுவைக்கு இவற்றையெல்லாம் கடாயில் 1 ஸ்பூன் எண்ணையுடன் ஒன்று ஒன்றாக போட்டு சிறிது நேரம் வதக்கி ஆற வைக்கவும்.)
பட்டை - 1 
லவங்கம் - 1
சோம்பு - 1 ஸ்பூன்
கசகச - சிறிதளவு
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்ஸ்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப
மேல் கூறிய எல்லாம் சேர்த்து மிக்சியில் போட்டு நன்கு அரைத்து வைக்கவும். (தண்ணீர்  தேவைக்கு ஏற்ப)

தாளிக்க
பெரிய வெங்காயம் - 2  (அல்லது  டைம் இருந்தால் சின்ன வெங்காயம் - 5  மேலும் சுவைக்கு.)
தக்காளி - 4 
பட்டை - 1 
லவங்கம் - 1 
கறிவேப்பிலை

செய்முறை

வெங்காயாம்,தக்காளியை  பொடியாக கட் செய்து கொள்ளவும். ஆயில் 2  ஸ்பூன் ஊற்றி பட்டை, லவங்கம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்பு அரைத்து  வைத்த மசாலாவை இதோடு சேர்த்து தண்ணீர் கலந்து கொதிக்க வைக்கவும். நன்கு சுண்டியவுடன் கொத்தமல்லி சேர்க்கவும்.

இது இட்லி, தோசை, சப்பாத்தியுடன் நன்றாக இருக்கும்